Tuesday, August 13, 2019

தம்பி பொண்டாட்டிக்காக..!!!

யண்ணா வாழ்ந்தா உன்ன போல 
வாழனும்.. எவ்ளோ போலீஸ் மாறனாலும்
ஜெயில்ல உனக்கு கிடைக்கற
மரியாதையே வேற.. எப்படின்னா இவ்ளோ
கெத்தா இருக்க.. ச்ச.. வேற லெவெல்ன்னா நீ...
நா போட்டுட்டு வந்த ஆள் அப்படி..டா
பிளான் போட்டு எல்லாம் பண்ணலடா..
தம்பி பொண்டாட்டிய தப்பா பேசுனான்
ஏற்கனவே ஏரியால பலருக்கு தொல்லை
கொடுத்திட்டு இருந்தான் ஒருநாள் வழில
சிக்கினான்.. துண்டாலயே கழுத்தை
திருவிட்டன்.. ஆனாலும் மனசு வலிக்குதுடா..
கோபத்துல பண்ணிடறோம் பின்னால
யோசிக்கிறோம்.. விடுண்ணா இப்போ உன்
கெத்து ஏறிடுச்சுல... போலீஸ் கண்டுக்காம
விடுதுல நீ யாரை மிரட்டினாலும்.. அவ்ளோதான்..
இதுக்காக அவனவன் எவ்ளோ செலவு பண்றான்..
சரிண்ணா நா போய் குழம்பு கொதிச்சிடுச்சான்னு
பாக்குறேன்..
பலபேர் மரியாதை கொடுத்தாலும் என்
வீட்ல இருந்து வந்து என் பொண்ணு என்ன
பாக்கலையே... என் பொண்டாட்டி சனிக்கிழம
ஆச்சுன்னா தலைல எண்ண வச்சு தட்டி விடுவா
ஞாயித்து கிழம ஆடு, கோழி, மீனுன்னு எல்லாம்
வகையா சமைச்சு வைப்பா.. அந்த ருசியும்
பசியும் இங்க கிடைக்கலையே.. படுக்கறப்ப
நெஞ்சுல கைபோட்டு நெஞ்சு முடிய அவ
தடவறப்ப அத்தன கஷ்டங்களும் இதமாவும்..
இங்க சோத்துல உப்பு குறவு.. உணர்ச்சி
இல்லாம இருக்க மருந்து கலக்கறானுங்க..
தெரிஞ்சும் திங்கறோம் வாழறோம்..
வெளிய போனா உசுரு நிரந்தரம் இல்ல..
இதெல்லாம் இந்த கெத்துக்கு பின்னால
இருக்கற சோகம்னு அவனுக்கு சொன்னா
புரியுமா??? என நினைத்தவாறே கண்ணை
துடைத்து சாப்பிட கிளம்பினான்...!!!

No comments:

Post a Comment